பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ரத்த சோகை: தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024-ன் போது முக்கிய கவனம் செலுத்தவேண்டிய அம்சம்
Posted On:
03 SEP 2024 4:48PM by PIB Chennai
இந்த ஆண்டு ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படும் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று இரத்த சோகை. இரத்த சோகை எப்போதும் மக்கள் இயக்கத்தின் கீழ், முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். ரத்த சோகை என்பது, ஒரு உடல்நலக் கவலையாகும், இது முக்கியமாக இளம் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் மற்றும் இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களை பாதிக்கிறது. எதிர்கால சந்ததியினருக்கு இரத்த சோகையின் இடைநிலை விளைவுகளைத் தடுக்க இளம் வளரிளம் பருவத்தில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய வளரிளம் பருவம், சரியான வாய்ப்பின் சாளரமாகும்.
ரத்த சோகையைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரத்தசோகை தொடர்பான பிரத்யேக கருப்பொருள்கள் மற்றும் செயல்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளுடன் ஒருங்கிணைந்து, மக்கள் விழிப்புணர்வுக்காக, முந்தைய ஜனவரி மாத கூட்டத்தில் மேற்கொண்டுள்ளது. செப்டம்பர், 2023-ல் நடைபெற்ற கடைசி ஊட்டச்சத்து மாதத்தில், 35 கோடிக்கும் அதிகமான உணர்திறன் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன, அவற்றில் சுமார் 4 கோடி இரத்த சோகையை மையமாகக் கொண்டுள்ளன.
69 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் (PW) மற்றும் 43 லட்சம் பாலூட்டும் தாய்மார்களை (LM) நேரடியாகச் சென்றடைவதைத் தவிர, இந்தத் திட்டம், தற்போது முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளரிளம் பெண்களுக்கான திட்டத்தின் (SAG) கீழ் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வளரிளம் பெண்களை (14-18 வயது) உள்ளடக்கியுள்ளது. 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வலுவான நேரடி இருப்புடன், ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட மக்கள் இயக்கங்கள் மூலம் ஆண்டுக்கு இரண்டு முறை நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைகிறது. வளரிளம் பெண்களை ஈடுபடுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க தேவையான கூடுதல் வேகத்தை வழங்குவதற்கான அனைத்து ஆற்றலையும் கொண்டுள்ளது, குறிப்பாக அவர்களின் ஈடுபாட்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoH&FW) இரத்த சோகை இல்லாத இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளைத் தொடர்கிறது.
மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, உத்கர்ஷ் ஐந்து மாவட்டங்களில் உள்ள வளரிளம் பெண்களின் (14-18 வயது) ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், ரத்த சோகையை நிர்வகிப்பதற்கான முன்முயற்சியை செயல்படுத்தி வருகிறது.
***
MM/AG/DL
(Release ID: 2051475)
Visitor Counter : 62
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Kannada
,
Malayalam