குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய அறிவியல் விருதுகள்-2024-ஐ குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
22 AUG 2024 2:20PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள காந்த்ர மண்டபத்தில் இன்று (2024 ஆகஸ்ட் 22) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய அறிவியல் விருதுகளை (ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் -2024) வழங்கினார்.
ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதின் முதல் பதிப்பில், விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளில் 33 விருதுகள் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டன.
அறிவியல் - தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விஞ்ஞான் ரத்னா விருது, இந்தியாவில் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முன்னோடியான பேராசிரியர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது. அறிவியல் - தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விஞ்ஞானஸ்ரீ விருதுகள், அந்தந்த துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகளுக்காக 13 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டன. அறிவியல் - தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் சிறப்பாக பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் விக்யான் யுவா-எஸ்.எஸ்.பி விருது, இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்த ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக 18 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக ஒரு விஞ்ஞானிகள் குழுவுக்கு விஞ்ஞான் குழு விருது வழங்கப்பட்டது.
***
PLM/DL
(Release ID: 2047743)
Visitor Counter : 112
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam