மத்திய அமைச்சரவை
ஸ்வர்கேட் முதல் கத்ராஜ் வரையிலான தெற்கு நோக்கிய 5.46 கிலோமீட்டர் நீளமுள்ள புனே மெட்ரோ முதல் கட்ட திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
16 AUG 2024 8:18PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, புனே மெட்ரோ முதல் கட்டத் திட்டத்தின் தற்போதுள்ள பிசிஎம்சி – ஸ்வர்கேட் மெட்ரோ ரயில் பாதையின் ஸ்வர்கேட் முதல் கத்ராஜ் சுரங்க ரயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய நீட்டிப்பு லைன்-எல் பி நீட்டிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது 5.46 கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் மற்றும் மூன்று நிலத்தடி நிலையங்களை உள்ளடக்கியதாகும். இது மார்க்கெட் யார்டு, பிப்வேவாடி, பாலாஜி நகர், கட்ராஜ் புறநகர் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும்.
புனேவில் தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், பிப்ரவரி - 2029-க்குள் முடிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான உத்தேச மதிப்பீடு ரூ.2954.53 கோடியாகும். இதற்கான நிதியுதவியை மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதுடன், இருதரப்பு முகமைகளின் பங்களிப்பும் இதில் அடங்கும்.
ஸ்வர்கேட் முதல் கத்ராஜ் வரையிலான நிலத்தடி பாதை சாலை போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் விபத்துக்கள், மாசுபாடு, பயண நேரம் ஆகியவற்றையும் குறைப்பதன் மூலம் பாதுகாப்பான, வசதியான பயண அனுபவத்தை வழங்கும். இது நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.
****
PLM/KV
(Release ID: 2046271)
Visitor Counter : 60
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam