பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2024 11:40PM by PIB Chennai

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவந்த 2024  ஒலிம்பிக் போட்டிகள் இன்று  நிறைவடைந்த நிலையில், இந்தியக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்திய தடகள வீரர்களை நாயகர்கள் என்று அழைத்த திரு. மோடி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் #Olympics நிறைவடையும் வேளையில், விளையாட்டுகள் மூலம், ஒட்டுமொத்த இந்திய அணியின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். நமது விளையாட்டு உலக நாயகர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”

***

(Release ID: 2044346)

PKV/BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2044361) வருகையாளர் எண்ணிக்கை : 142