உள்துறை அமைச்சகம்
இந்திய-பங்களாதேஷ் எல்லையில் (IBB) தற்போதைய நிலைமையைக் கண்காணிக்க குழு அமைப்பு
Posted On:
09 AUG 2024 3:06PM by PIB Chennai
இந்திய-பங்களாதேஷ் எல்லையில் (ஐபிபி) தற்போதைய நிலைமையைக் கண்காணிக்க, மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்திய குடிமக்கள் மற்றும் பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த குழு பங்களாதேஷில் உள்ள சக அதிகாரிகளுடன் தகவல் தொடர்புகளை பராமரிக்கும்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் கிழக்கு எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், எல்லைப் பாதுகாப்புப் படையின் தெற்கு வங்கத் தலைமையகத்தின் ஐஜி, எல்லைப் பாதுகாப்புப் படையின் எல்லைப்புறத் தலைமையக ஐஜி, இந்திய நில துறைமுக ஆணையத்தின் உறுப்பினர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு), இந்திய நில துறைமுக ஆணையத்தின் (எல்பிஏஐ) உறுப்பினர், எல்பிஏஐ செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043794)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam