பிரதமர் அலுவலகம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
08 AUG 2024 7:46PM by PIB Chennai
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீரர்களின் திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வை திரு மோடி பாராட்டினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"தலைமுறை,தலைமுறையாக போற்றப்படக்கூடிய ஒரு சாதனை!
ஒலிம்பிக்கில் ஜொலித்த இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது!
ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது பதக்கம் என்பதால் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
இது, வீரர்களின் திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றியாகும். அவர்கள் மிகுந்த மன உறுதியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். வீரர்களுக்கு நல்வாழ்த்துகள்.
ஒவ்வொரு இந்தியருக்கும் ஹாக்கியுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பு உள்ளது, இந்த சாதனை, நம் நாட்டின் இளைஞர்களிடையே விளையாட்டை இன்னும் பிரபலமாக்கும்.”
BR/KR
***
(रिलीज़ आईडी: 2043490)
आगंतुक पटल : 87
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam