பிரதமர் அலுவலகம்
வங்கதேசத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
08 AUG 2024 9:50PM by PIB Chennai
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அண்டை நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் பதிவிட்டதாவது:
"புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள பேராசிரியர் முஹம்மது யூனுஸுக்கு எனது வாழ்த்துகள். இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான நமது இரு நாட்டு மக்களின் பகிர்ந்து கொள்ளப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது."
BR/KR
***
(रिलीज़ आईडी: 2043480)
आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam