பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சமூக ஊடகங்களில் மூவர்ணக் கொடி கொண்ட சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

harghartiranga.com இணையதளத்தில் தேசியக்கொடியுடனான சுயபடத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்

Posted On: 09 AUG 2024 9:01AM by PIB Chennai

சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார். இல்லந்தோறும் மூவர்ணக் கொடிஇயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

harghartiranga.com இணையதளத்தில்  தேசியக் கொடியுடனான சுயபடத்தைப்  பகிர்ந்து கொள்ளுமாறு  திரு மோடி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’  #HarGharTiranga இயக்கத்தை  மீண்டும் ஒரு மறக்கமுடியாத வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றி வருகிறேன். நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள்  சுயபடங்களை harghartiranga.com இல் பகிர்ந்து கொள்ளுங்கள்"

BR/KR

***

 


(Release ID: 2043454) Visitor Counter : 73