பிரதமர் அலுவலகம்
மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2024 10:07AM by PIB Chennai
சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அதன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய அயராத சேவையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"உதய தினத்தை முன்னிட்டு, சிஆர்பிஎப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான இடைவிடாத சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்கள் எப்போதும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் மிக உயர்ந்த தரத்திற்கு அடையாளமாக நின்றுள்ளனர். நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்களின் பங்கும் மிக அளப்பரியதாகும்’’.
****
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2037881)
வருகையாளர் எண்ணிக்கை : 81
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam