பிரதமர் அலுவலகம்

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமருக்கு அளிக்கப்படும் முன்னுரிமைக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 24 JUL 2024 9:17PM by PIB Chennai

இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மர்  அளித்துள்ள முன்னுரிமையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.

இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை அமைச்சர் திரு டேவிட் லாமி, திரு மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இங்கிலாந்து அமைச்சர் டேவிட் லாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. விரிவான உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்  அளித்த முன்னுரிமைக்கு பாராட்டு தெரிவித்தேன். உறவுகளை வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இருதரப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியையும், பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான விருப்பத்தையும் வரவேற்கிறோம்."

***

(Release ID: 2036592)

PKV/KPG/KR



(Release ID: 2036659) Visitor Counter : 35