நிதி அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு 8 புதிய நடவடிக்கைகள்

Posted On: 23 JUL 2024 1:03PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு மத்திய அரசின்  8 புதிய நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தமது பட்ஜெட் உரையின் போது விவரித்தார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்க சுயநிதி உத்தரவாத நிதி உருவாக்கப்படும் என்றும், கடன் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வெளியார் மதிப்பீட்டிற்கு மாறாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான திறனை பொதுத்துறை வங்கிகள் உள்நிலை மதிப்பீட்டை சார்ந்திருக்கும் என்றும், இதற்கு புதிய, சுயேச்சையான நடைமுறை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய கடனை வெற்றிகரமாக திருப்பி செலுத்திய நிறுவனங்களுக்கான முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சம் என்பதிலிருந்து, ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும். 

பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் அளவு ரூ.500 கோடியிலிருந்து ரூ.250 கோடியாக குறைக்கப்படும்.  இதன்மூலம் 7,000 –க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடையும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை சர்வதேச சந்தைகளில் விற்பதற்கு வசதியாக அரசு, தனியார் துறை பங்களிப்புடன் இ-வணிக ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035589

***

SMB/KV/KR



(Release ID: 2035819) Visitor Counter : 17