நிதி அமைச்சகம்
ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுடன் 1 கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு வீடுகள்
प्रविष्टि तिथि:
23 JUL 2024 12:44PM by PIB Chennai
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
இதில் அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ரூ.2.2 லட்சம் கோடி உதவியும் அடங்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வட்டி மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
"தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடங்களுடன் கூடிய வாடகை வீடுகள் சாத்தியக்கூறு இடைவெளி நிதி ஆதரவு மற்றும் முக்கிய தொழில்களின் அர்ப்பணிப்புடன் பொது-தனியார் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தி தரப்படும்" என்று அவர் தெரிவித்தார். மேம்பட்ட தன்மையுடன் திறமையான மற்றும் வெளிப்படையான வாடகை வீட்டுச் சந்தைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நகரங்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.
30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 14 பெரிய நகரங்களுக்கு போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித்திட்டங்கள், செயல்படுத்தல் மற்றும் நிதி உத்தியுடன் அவர் அறிவித்தார்.
தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை மாற்றுவதில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100 வாராந்திர தெரு உணவு மையங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தவிருப்பதாக திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
முத்திரைத்தீர்வையைத் தொடர்ந்து வசூலிக்கும் மாநிலங்கள், அனைவருக்குமான கட்டணத்தை குறைப்பதை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்றும், பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான வரிகளை மேலும் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2035563)
PKV/BR/KR
(रिलीज़ आईडी: 2035717)
आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam