நிதி அமைச்சகம்
கடந்த 9 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்காக 2.63 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
22 JUL 2024 2:26PM by PIB Chennai
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஏழைகளுக்காக 2.63 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024 கூறுகிறது.
அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், நிதி உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது. தூய்மை இந்தியா கிராமப்புற திட்டத்தின் கீழ் 11.57 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜூலை 10 ஆம் தேதி நிலவரப்படி ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 11.7 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 26-ம் தேதி நிலவரப்படி பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் 35.7 கோடி ரூபே டெபிட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கிராமப்புறங்களில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த வழிவகுக்கிறது. சுகாதாரத் துறையில், 1.58 லட்சம் கிளை மையங்களும், 24,935 ஆரம்ப சுகாதார நிலையங்களும் கிராமப்புறங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன.
தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், லட்சாதிபதி சகோதரிகள் முன்முயற்சி, தீன்தயாள் உபாத்யாய கிராம திறன் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்கள் கிராமப்புறங்களில் வாழ்வாதார உருவாக்கத்தை மேம்படுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034918
***
PKV/KV/DL
(रिलीज़ आईडी: 2035189)
आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam