பிரதமர் அலுவலகம்
விடிஎன்கேஹெச் ரோசாட்டம் அரங்கிற்கு பிரதமர் சென்று பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUL 2024 4:18PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கண்காட்சி மையத்தை இன்று பார்வையிட்டனர்.
இரு தலைவர்களும் விடிஎன்கேஹெச்-ல் உள்ள ரோசாட்டம் அரங்கை சுற்றிப் பார்த்தனர். 2023 நவம்பரில் திறக்கப்பட்ட ரோசாட்டம் அரங்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாகும். அணுசக்தித் துறையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். இந்தியாவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இதயமாக விளங்கும் விவிஇஆர்-1000 அணு உலையின் நிரந்தர செயல்பாட்டு மாதிரியான "அணு சிம்பொனி" பிரதமருக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த அரங்கில் இந்திய மற்றும் ரஷ்ய மாணவர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினருக்கும், பூமிக்கும் பயனளிக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அவர்களைப் பிரதமர் ஊக்குவித்தார்.
***
(Release ID: 2031752)
VL/PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2031783)
வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Marathi
,
Gujarati
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada