நித்தி ஆயோக்

'சம்பூர்ணதா அபியான்' என்ற இயக்கத்தை நித்தி ஆயோக் நாளை தொடங்குகிறது

Posted On: 03 JUL 2024 4:37PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும், முன்னேற விரும்பும் வட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும் அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சியை நித்தி ஆயோக் மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக நாளை முதல்  (2024 ஜூலை 4) செப்டம்பர் 30-ம் தேதி வரை 'சம்பூர்ணாத அபியான்' என்ற 3 மாத இயக்கத்தை நித்தி ஆயோக் தொடங்குகிறது.

சம்பூர்ணதா இயக்கம் 112 முன்னேற விரும்பும் 500 வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்ட 6 குறியீடுகளில் செறிவூட்டலை அடையும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில், வட்ட அளவில் கவனம் செலுத்தப்படும் 6 குறியீடுகள்:

  1. கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்யும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  2. நீரிழிவு நோய்க்கு பரிசோதனை செய்பவர்களின் விழுக்காடு
  3. ரத்த அழுத்த பரிசோதனை விழுக்காடு
  4. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  5. மண் மாதிரி சேகரிப்பு இலக்கில் உருவாக்கப்பட்ட மண்வள அட்டைகளின் சதவீதம்
  6. வட்டத்திலுள்ள மொத்த சுய உதவிக் குழுக்களில் சுழல் நிதி பெற்ற சுய உதவிக் குழுக்களின் விழுக்காடு

'சம்பூர்ணதா அபியான்' இயக்கத்தின் கீழ் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 6 குறியீடுகள்:

  1. கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  2. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  3. முழுமையாக நோய்த்தடுப்பூவி செய்யப்பட்ட குழந்தைகளின் சதவீதம்
  4. வழங்கப்பட்ட மண்வள அட்டைகளின் எண்ணிக்கை
  5. இடைநிலைக் கல்வியில் மின்சார வசதி உள்ள பள்ளிகளின் விழுக்காடு
  6. கல்வி தொடங்கிய 1 மாதத்திற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பள்ளிகளின் விழுக்காடு

நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக 112 மாவட்டங்களை உள்ளடக்கிய முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய குறிகாட்டிகளை மேம்படுத்துவதில் இத்திட்டம் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்  வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, முன்னேற விரும்பும் வட்டங்கள் திட்டம் 2023-ம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் அத்தியாவசிய சேவைகளில் செறிவூட்டலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

PLM/AG/KV



(Release ID: 2030456) Visitor Counter : 35