நிதி அமைச்சகம்
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தவணையாக ரூ.1,39,750 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தவணையாக ரூ.1,39,750 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
प्रविष्टि तिथि:
10 JUN 2024 9:19PM by PIB Chennai
அதிகாரப் பகிர்வு வரி வருவாயை முறையாக விடுவிப்பதோடு,
ஜூன் 2024 மாதத்திற்கு, கூடுதலாக ஒரு தவணை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் நடப்பு மாதத்தில் விடுவிக்கப்பட்ட ஒட்டுமொத்த தொகை ரூ.1,39,750 கோடியாக உள்ளது. இது மாநில அரசுகளுக்கு வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களை மேலும் துரிதப்படுத்த உதவும்.
2024-25 இடைக்கால பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வுக்காக ரூ.12,19,783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுவிப்பின் மூலம், 2024 ஜூன் 10 வரை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த தொகை (2024-25 நிதியாண்டில்) ரூ.2,79,500 கோடியாக உள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ. 5700.44 கோடி, கேரளாவுக்கு ரூ. 2690.20 கோடி உட்பட 28 மாநிலங்களுக்கு ரூ. 1,39,750.92 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023869
=======
AD/DL
(रिलीज़ आईडी: 2023882)
आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam