பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        பிரதமர் திரு மோடிக்கு வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                05 JUN 2024 10:13PM by PIB Chennai
                
                
                
                
                
                
                18-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்காக வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 
பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவும் ஒருவர். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான இணக்கமான மற்றும் தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கிறது. 
வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 மற்றும் திறன்மிகுந்த வங்கதேசம் 2041 என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி முன்னேற  வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான உறவுகளை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதியளித்தனர். 
கடந்த பத்தாண்டுகளில் இரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக் கூட்டாண்மை, எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்புகள், மக்களுக்கு இடையேயான தொடர்புகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மாற்றத்துக்கான உறவை மேலும் மேம்படுத்த ஆர்வம் தெரிவித்தனர்.
***
(Release ID: 2022972)
PKV/BR/RR
                
                
                
                
                
                (Release ID: 2023027)
                Visitor Counter : 125
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam