பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
05 JUN 2024 10:15PM by PIB Chennai
பூட்டான் மன்னர் திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு மன்னர் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மன்னரின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பூட்டான் மற்றும் இந்தியா இடையே நிலவும் முன்மாதிரியான நட்புறவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பூட்டான் அரசுடன் இணைந்து பணியாற்றவும், தனித்துவமான இருதரப்பு பங்களிப்பை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.
இந்தியா-பூட்டான் ஒத்துழைப்பு அனைத்து மட்டங்களிலும் அதிகபட்ச நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும் இது, மக்களுக்கு இடையேயான வலுவான இணைப்புகள் மற்றும் நெருங்கிய பொருளாதார மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மை ஆகியவற்றால் வலுப்படுத்தப்படுகிறது.
***
(Release ID: 2022973)
PKV/BR/RR
(रिलीज़ आईडी: 2023026)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam