தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப உள்ளது

Posted On: 03 JUN 2024 6:47PM by PIB Chennai

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தூர்தர்ஷனில்  ஒளிபரப்பப்படும் என்று  பிரசார் பாரதி இன்று (03.06.2024) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மிகப் பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் ஒளிபரப்ப உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (ஜூலை 26  முதல் ஆகஸ்ட்  11 வரை) பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் (ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை) இந்தியா ஜிம்பாப்வே இடையேயான சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்கள் (ஜூலை 6 முதல் 14 வரை) இந்தியா,  இலங்கை இடையேயான போட்டிகள் (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை) ஆடவர் மற்றும் மகளிர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் (ஜூன் 8 மற்றும் 9), விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் (ஜூலை 13 மற்றும் 14) ஆகிய போட்டிகளையும் தூர்தர்ஷன்  நேரடியாக / சற்று காலம் தாழ்த்தி / முக்கிய அம்சங்களை ஒளிபரப்ப உள்ளது.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசார் பாரதியின்
தலைமை நிர்வாக அதிகாரி திரு கௌரவ் துவிவேதி இதனைத் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின்  போது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, பிரசார் பாரதி தலைவர் திரு நவ்னீத் குமார் செகால், தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திருமதி கஞ்சன் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான சிறப்பு கீதம் ‘ஜாஸ்பா’-வை திரு சுக்வீந்தர் சிங் பாடினார்.  இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கான முன்னோட்டத்தை புகழ் பெற்ற கதை சொல்லி திரு நீலேஷ் மிஸ்ரா வெளியிட்டார்.

உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப என்பிஏ, பிஜிடிஏ போன்ற முன்னணி விளையாட்டு அமைப்புகளுடன் தூர்தர்ஷன் புரிந்துணர்வை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

டிடி விளையாட்டுகள் அலைவரிசையை காண்பதற்கு

டாடா ஸ்கை அலைவரிசை எண் 453

சன் டைரக்ட் அலைவரிசை எண் 510

ஹாத்வே அலைவரிசை எண் 189

 

டிஇஎன் அலைவரிசை எண் 425

ஏர்டெல் டிஜிட்டல் டிவி அலைவரிசை எண் 298

டி2 எச் அலைவரிசை எண்  435

ப்ரீ டிஷ் அலைவரிசை எண் 79

டிஷ் டிவி அலைவரிசை எண் 435

 

 

சமூக ஊடகங்களில் டிடி விளையாட்டுகள் அலைவரிசையை பின்தொடர

ட்விட்டர் -  @ddsportschannel

முகநூல்- Doordarshansports

இன்ஸ்டாக்ராம் - doordarshansports

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022653

***

AD/SMB/KPG/DL


(Release ID: 2022675) Visitor Counter : 99