தேர்தல் ஆணையம்

கடந்த 35 ஆண்டுகளில் ஒரு பொதுத் தேர்தலில் அதிக அளவு வாக்குப்பதிவு செய்ததன் மூலம் ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted On: 27 MAY 2024 2:59PM by PIB Chennai

இந்திய தேர்தல் வரலாற்றில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீரில் தான் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முழு யூனியன் பிரதேசத்திலும் (5 மக்களவைத் தொகுதிகள்) 58.46% அளவிற்கு வாக்குப்பதிவு நடந்தது . இந்தக் குறிப்பிடத்தக்கப் பங்கேற்பு இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களின் வலுவான ஜனநாயக உணர்வு மற்றும் குடிமை ஈடுபாட்டிற்கு ஒரு சான்றாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் யூனியன் பிரதேசத்தில் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக வாக்குச்சாவடிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் ஜம்மு  காஷ்மீர் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்தார். "இந்த சாதனை 2019-ம் ஆண்டு முதல் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிப்பு, சி-விஜில் புகார்கள் மற்றும் பேரணிகளுக்கான 2455 கோரிக்கைகள் இடம் பெற்றுள்ள சுவிதா இணையதளம் ஆகியவை தயக்கமின்றி தேர்தல் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

இந்தத் தீவிர பங்கேற்பு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பெரிய சாதகமாகும், இதனால் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வளரும் என்று அவர் கூறினார்.

 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் 50.86% வாக்குகள் பதிவாகியிருப்பது ஜனநாயக நடைமுறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எதிரொலிக்கிறது. வாக்களிப்பு சதவீதம் 2019 –ம் ஆண்டு 19.16% ஆக இருந்த நிலையில் அது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜௌரி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் முறையே 38.49%, 59.1% மற்றும் 54.84% அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில்  மிக அதிகமாகும். யூனியன் பிரதேசத்தின் மற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் முறையே 68.27% மற்றும் 72.22% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021787

 

******

SMB/IR/RR/KR/DL



(Release ID: 2021821) Visitor Counter : 57