தேர்தல் ஆணையம்
                
                
                
                
                
                    
                    
                        மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவில்  8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
                    
                    
                        5-ம் கட்டத்துக்காக 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளில் 1586 வேட்புமனு தாக்கல் 
                    
                
                
                    Posted On:
                08 MAY 2024 2:46PM by PIB Chennai
                
                
                
                
                
                
                2024 மக்களவைத் தேர்தலில் மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்காக 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் மொத்தம் 1586 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
 
8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 3-ந் தேதியாகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 749 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது.
 
ஐந்தாம் கட்டத்தில், மகாராஷ்டிராவில் 13 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 512 வேட்பு மனுக்களும் உத்தரப்பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 466 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும்.
 
மக்களவைத் தேர்தல் 2024 பொதுத் தேர்தலின் 5 ஆம் கட்டத்திற்கான மாநில/யூனியன் பிரதேச வாரியான விவரங்கள்:
 
	
		
			| 
			 மாநிலம்/ 
			யூனியன் பிரதேசம் 
			 | 
			
			 தொகுதிகளின் எண்ணிக்கை 
			 | 
			
			 தாக்கலான 
			வேட்பு மனுக்கள்  
			 | 
			
			 செல்லுபடியான 
			மனுக்கள் 
			 | 
			
			 வாபஸ் பெற்ற பின், இறுதி நிலவரம் 
			 | 
		
		
			| 
			 பீகார் 
			 | 
			
			 5 
			 | 
			
			 164 
			 | 
			
			 82 
			 | 
			
			 80 
			 | 
		
		
			| 
			 ஜம்மு & காஷ்மீர் 
			 | 
			
			 1 
			 | 
			
			 38 
			 | 
			
			 23 
			 | 
			
			 22 
			 | 
		
		
			| 
			 ஜார்கண்ட் 
			 | 
			
			 3 
			 | 
			
			 148 
			 | 
			
			 57 
			 | 
			
			 54 
			 | 
		
		
			| 
			 லடாக் 
			 | 
			
			 1 
			 | 
			
			 8 
			 | 
			
			 5 
			 | 
			
			 3 
			 | 
		
		
			| 
			 மகாராஷ்டிரா 
			 | 
			
			 13 
			 | 
			
			 512 
			 | 
			
			 301 
			 | 
			
			 264 
			 | 
		
		
			| 
			 ஒடிசா 
			 | 
			
			 5 
			 | 
			
			 87 
			 | 
			
			 41 
			 | 
			
			 40 
			 | 
		
		
			| 
			 உத்தரப் பிரதேசம் 
			 | 
			
			 14 
			 | 
			
			 466 
			 | 
			
			 147 
			 | 
			
			 144 
			 | 
		
		
			| 
			 மேற்கு வங்காளம் 
			 | 
			
			 7 
			 | 
			
			 163 
			 | 
			
			 93 
			 | 
			
			 88 
			 | 
		
		
			| 
			 மொத்தம் 
			 | 
			
			 49 
			 | 
			
			 1586 
			 | 
			
			 749 
			 | 
			
			 695 
			 | 
		
	
 
 
******
PKV/RR/KR
 
 
 
                
                
                
                
                
                (Release ID: 2019953)
                Visitor Counter : 254
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Hindi_MP 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia