பிரதமர் அலுவலகம்
அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யாவின் சிறப்பு முன்னுரிமையான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்
இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்
ரஷ்யா-உக்ரைன் மோதலில், ராஜிய முறையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வழிமுறையாக பேச்சுவார்த்தையை பிரதமர் வலியுறுத்தினார்
प्रविष्टि तिथि:
20 MAR 2024 3:33PM by PIB Chennai
ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். ரஷிய கூட்டமைப்பின் அதிபராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நட்பு ரீதியிலான ரஷ்ய மக்களின் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றிற்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சிறப்பு மற்றும் முன்னுரிமையான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததுடன், பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்த பிரதமர், பேச்சுவார்த்தை, ராஜிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவின் நீடித்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
***
PKV/IR/RS/KRS/DL
(रिलीज़ आईडी: 2015724)
आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam