பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம் மற்றும் படகுத்துறையை திறந்து வைக்கின்றனர்

அகலேகா தீவில் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படவுள்ளன

இத்திட்டம் மொரீஷியஸ் பெருநிலப்பகுதியுடன் அகலேகாவுக்கான இணைப்பை மேம்படுத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும்

प्रविष्टि तिथि: 27 FEB 2024 6:44PM by PIB Chennai

மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் 2024 பிப்ரவரி 29 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து புதிய விமான ஓடுபாதை, செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை மற்றும் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைக்க உள்ளனர்.

 

இந்தத் திட்டங்கள், இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான வலுவான மற்றும்  நீண்ட கால ஒத்துழைப்புக்கு ஒரு சான்றாக அமையும். இந்தத் திட்டங்கள் மொரீஷியஸ் பெருநிலப் பகுதி மற்றும் அகலேகா இடையே சிறந்த போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தி, சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

 

2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை சேவைகளை தொடங்கி வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

Release ID: 2009499

 

AD/PLM/KRS


(रिलीज़ आईडी: 2009605) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam