பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2024 7:08PM by PIB Chennai
புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடனான தமது பல்வேறு கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கஜ் உதாஸ் இந்திய இசையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார். அவரது மெல்லிசை பல தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பங்கஜ் உதாஸ் அவர்களின் இழப்பு நமக்குத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அவரது இசை ஆன்மாவுடன் நேரடியாக பேசியது. அவர் இந்திய இசையின் கலங்கரை விளக்கமாகத. அவரது மெல்லிசை தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும். பல ஆண்டுகளாக அவருடனான எனது பல்வேறு தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன்.
அவரது மறைவு இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
***
(Release ID: 2009197)
ANU/AD /PLM/RS/ KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2009245)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam