பிரதமர் அலுவலகம்
ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிப்ரவரி 8 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
07 FEB 2024 4:33PM by PIB Chennai
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 8 ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் உரையாற்றுவார். மாபெரும் ஆன்மீக குரு ஸ்ரீல பிரபுபாதாவை கெளரவிக்கும் வகையில் நினைவுத் தபால் தலை மற்றும் நாணயத்தைப் பிரதமர் வெளியிடுவார்.
ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதா கௌடியா மிஷனின் நிறுவனர் ஆவார். அவர் வைணவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் போதனைகளையும், வைணவத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் பரப்புவதில் கௌடியா மிஷன் குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டுள்ளது. இது ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மையமாக உள்ளது.
***
ANU/SMB/KV
(रिलीज़ आईडी: 2003542)
आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam