பிரதமர் அலுவலகம்
குடியரசு தின விழாவில் பங்கேற்றதற்காக ஃபிரான்ஸ் அதிபருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2024 9:29PM by PIB Chennai
இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றதற்காக ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மேக்ரனின் ஒரு பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"எங்கள் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதற்காக அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு நன்றி. உங்களின் வருகை இந்தியா-ஃபிரான்ஸ் உறவுகளுக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும்".
***
(Release ID: 1999955)
ANU/SMB/PKV/RS/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2000504)
வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam