பிரதமர் அலுவலகம்
திரு கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JAN 2024 9:05PM by PIB Chennai
சமூக நீதிக்கான முன்னோடி திரு கர்ப்பூரி தாக்கூருக்கு மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்படும் முடிவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கர்ப்பூரி தாக்கூரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு நாட்டு மக்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று திரு மோடி கூறியுள்ளார். பின்தங்கிய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை இந்தியாவின் சமூக-அரசியல் சூழ்நிலையில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"சமூக நீதியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த, மாபெரும் ஜன் நாயக் கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டைக் குறிக்கும் தருணத்தில், இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் விளிம்புநிலை மக்களின் நாயகராகவும், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலில் உறுதிகொண்டவராகவும் திகழ்ந்த அவரது நீடித்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.
ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமை ஆகியவை இந்தியாவின் சமூக-அரசியல் கட்டமைப்பில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. இந்த விருது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை கௌரவிப்பது மட்டுமின்றி, மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது பணியைத் தொடர நமக்கு ஊக்கமளிக்கிறது”.
***
ANU/SMB/BS/RS/KRS
(रिलीज़ आईडी: 1999303)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam