பிரதமர் அலுவலகம்
"உறுதி அளிக்கப்பட்ட ஆதரவை விவசாயிகள் தற்போது உணர்ந்துள்ளனர் " - பிரதமரிடம் பஞ்சாப் விவசாயி
நமது குருக்களின் ஆலோசனைப்படி விவசாயம் செய்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும். குருநானக் தேவ்ஜியின் போதனைகளுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை: பிரதமர்
Posted On:
08 JAN 2024 3:21PM by PIB Chennai
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த குர்விந்தர் சிங் பஜ்வா பிரதமரிடம் பேசுகையில், வேளாண் துறையில் சிறந்த வருவாயைப் பெற விவசாயிகள் சிறு குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் பயணத்தின் மிகப்பெரிய ஆதாயமாகும் என்று கூறினார். தனது விவசாயிகள் குழு விஷமில்லா வேளாண்மையில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக, இயந்திரங்களுக்கு மானியம் கிடைத்துள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். இது சிறு விவசாயிகளுக்கு 'பரளி' (பயிர் எச்சங்கள்) மேலாண்மை மற்றும் வளமான மண்ணிற்கு உதவியது என்றும் தெரிவித்தார். அரசின் உதவியால் குர்தாஸ்பூரில் பயிர் எரிப்பு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று திரு பஜ்வா தெரிவித்தார். இப்பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. தனிப்பயன் வாடகை திட்டம் 50 கி.மீ சுற்றளவில் உள்ள சிறு விவசாயிகளுக்கு உதவுகிறது என்றும் அவர் கூறினார்.
"இப்போது விவசாயி தனக்கு சரியான ஆதரவு கிடைக்கும் என்று உணர்கிறார்", என்று திரு பிஜாவா மேலும் கூறினார். மோடி இருந்தால் அது சாத்தியம்' என்று எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதாக விவசாயி பிரதமரிடம் கூறினார். அதற்கு பதிலளித்த பிரதமர், விவசாயிகள் தனது கோரிக்கைகளைக் கேட்பதால் இது சாத்தியம் என்று தெரிவித்தார். நீடித்த வேளாண்மைக்கான தனது வேண்டுகோளை பிரதமர் மீண்டும் குறிப்பிட்டார். நமது குருமார்களின் ஆலோசனைப்படி வேளாண்மை செய்து பூமித் தாயை பாதுகாக்க வேண்டும். வேளாண்மைத் துறையில் குருநானக் தேவ்ஜியின் போதனைகளுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்று பிரதமர் கூறினார். நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை குறித்து பேசிய பிரதமர், "ஒவ்வொரு கடைசி பயனாளியையும் அடையும் வரை மோடி உத்தரவாத வாகனம்" செல்வது நிற்காது என்றார்.
***
ANU/SM/IR/RR/KV
(Release ID: 1994211)
Visitor Counter : 141
Read this release in:
Bengali
,
Odia
,
Kannada
,
English
,
Assamese
,
Manipuri
,
Telugu
,
Hindi
,
Marathi
,
Urdu
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Malayalam