பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிம்லாவின் ரோஹ்ருவைச் சேர்ந்த குஷ்லா தேவி பிரதமர் திரு நரேந்திர மோடியின் திட்டங்களின் உத்தரவாதத்துடன் சிக்கல்களை முறியடித்துள்ளார்


தொடக்கப் பள்ளியில் தண்ணீர் விநியோகப் பணிகளைச் செய்யும் அவர் பாதுகாப்பான வீடு கட்டி, குழந்தைகளின் கல்வியையும் உறுதி செய்துள்ளார்

கடந்த 9 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்: பிரதமர்

Posted On: 16 DEC 2023 6:10PM by PIB Chennai

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவின் ரோஹ்ருவில் உள்ள  ஒரு தொடக்கப் பள்ளியில் தண்ணீர் விநியோகிப்பவராகப் பணிபுரியும் குஷ்லா தேவி  பள்ளியில் பல்வேறு பணிகளைச் செய்கிறார். மேலும் 2022 முதல் இந்த பணியில் அவர் பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு, பிரதமரின் வீடு கட்டும்  திட்டத்தின் கீழ், 1.85 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டது. அவருக்கு நிலம் இருப்பதால், அவரது வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டத்தில் 2,000 ரூபாய் வருகிறது.

 

வாழ்க்கையின் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்காக அவரைப் பிரதமர் பாராட்டினார். திருமதி குஷ்லா தேவி தமது குழந்தைகள் கல்வியைப் பெறுகிறார்கள் என்றும் வாழ்க்கை கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த உத்வேகத்தை கடைபிடிக்குமாறும், குழந்தைகளுக்கு உதவக்கூடிய பிற அரசுத் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். 'மோடி கி கேரண்டி கி காடி' எனப்படும் மோடியின் உத்தரவாத வாகனம் என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து தகவல்களையும் பெறுமாறு கேட்டுக் கொண்டார். கடந்த 9 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர் என்றும் பெண்கள் தொடர்ந்து நல்ல பணிகளைச் செய்ய அரசுக்கு வலிமையைத் தருகிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

*******


ANU/PLM/DL


(Release ID: 1987270) Visitor Counter : 76