பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 23 NOV 2023 10:58AM by PIB Chennai

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் ஒரு வரலாற்று வெற்றி!

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வரலாற்றுப் புத்தகங்களில் தங்கள் பெயரைப் பதித்த அற்புதமான இந்திய பாரா வில்வித்தை அணிக்கு வாழ்த்துகள்!

இந்த அணி 4 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 9 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கள் சிறந்த செயல்திறனுடன் ஒளிர்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் பங்களிப்பிற்கும் பாராட்டுகள். அவர்கள் எப்போதும் நம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டே இருக்கட்டும்.

***

ANU/PVK/SMB/AG/KV


(Release ID: 1979026) Visitor Counter : 106