தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வளர்ச்சி அடைந்த பாரதம் சபத யாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

Posted On: 17 NOV 2023 4:00PM by PIB Chennai

வளர்ச்சி அடைந்த பாரதம் சபத யாத்திரைக்கு  (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை) நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நவம்பர் 15, 2023 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்தப் பயணம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. முதல் நாளில் நாடு முழுவதும் 259 கிராமப் பஞ்சாயத்துகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்தப் பயணம் சென்றடைந்தது. நாடு முழுவதும் கணிசமான பழங்குடி மக்கள் தொகை கொண்ட பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பல வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசின் திட்டங்களை 100 சதவீதம் மக்களைச் சென்றடைவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்த யாத்திரையின் முதல் நாளிலேயே 21,000-க்கும் மேற்பட்டோர் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு கோரி பதிவு செய்தனர்.

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்றதுடன் 1200-க்கும் மேற்பட்டோர் மைபாரத் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொண்டனர்

இந்தப் பயணத்திற்கான வேன்களைக் காண மக்கள் குவிந்ததுடன்அந்தந்த இடங்களில் வழங்கப்பட்ட   சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டனர். 6,000-க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பரிசோதனையும், 4500-க்கும் மேற்பட்டோருக்கு அரிவாள் செல் ரத்தசோகை நோய் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான விளக்கங்களும், அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் இந்தப் பயணத்தின் மூலம் நடத்தப்படுகிறது.   முதல் நாளில் 120-க்கும் மேற்பட்ட ட்ரோன் செயல்விளக்கங்கள் மற்றும் மண் வள அட்டை செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டன. அத்துடன் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை என்பது  மத்திய அரசின், மிகப்பெரிய மக்கள் தொடர்பு முயற்சியாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையில், அரசின் திட்டங்களின் பயன்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான  முயற்சியாக இந்தப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கிய  தளத்தில், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடர்பு (..சி) வேன்கள் மேற்கொள்ளும் பயண நடவடிக்கைகள் மற்றும் மக்கள் பங்கேற்பு குறித்த தரவுகள்  உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன.

***

(Release ID: 1977618)

ANU/PKV/PLM/AG/KRS



(Release ID: 1977687) Visitor Counter : 189