பிரதமர் அலுவலகம்
ஐசிசி உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2023 10:49PM by PIB Chennai
ஐசிசி உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் வெற்றி பெறவும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!
இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அற்புதமான பேட்டிங் மற்றும் சிறந்த பந்துவீச்சு நமது அணிக்கு போட்டியில் வெற்றியை தேடித் தந்தது.
இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!"
முகமது ஷமியின் அபாரமான ஆட்டத்தையும் பிரதமர் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
"இன்றைய அரையிறுதிப் போட்டி இன்னும் சிறப்பானதாக அமைந்தது, தனிப்பட்ட ஆட்டமும் சிறப்பானது.
இந்தப் போட்டியிலும், உலகக் கோப்பையிலும் @MdShami11 பந்து வீச்சு கிரிக்கெட் ரசிகர்களால் பல தலைமுறைகளுக்கு போற்றப்படும்.
நன்றாக விளையாடினார் ஷமி!"
***
(Release ID: 1977256)
ANU/PKV/IR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1977306)
வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada