பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் ஆண்களுக்கான 1500 மீட்டர் - டி11 இறுதிப் போட்டியில் அங்கூர் தாமா தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 4:38PM by PIB Chennai
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 1500 மீட்டர் டி11 இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அங்கூர் தாமாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்ற அங்கூர் தாமா, இந்த முறை ஆண்களுக்கான 1500 மீட்டர் - டி11 இறுதிப் போட்டியில் பிரம்மிக்கவைக்கும் வெற்றியைப் பெற்றார். இனி வரும் காலங்களில் அவர் மேலும் உயரத்தை நோக்கி ஓடட்டும்".
***********
ANU/AD/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1971058)
வருகையாளர் எண்ணிக்கை : 150
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu