இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 4:44PM by PIB Chennai
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ 5 பிரிவில் அற்புதமான வெண்கலப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
அவர்களின் சாதனைகள் நமது தேசம் போற்றும் திறமைக்கு சான்றாகும்"
***
ANU/AD/PKV/KRS