பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 20 OCT 2023 7:12PM by PIB Chennai

 குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் நாளை (21-10-2023) மாலை 5 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

 

இந்நிகழ்ச்சியின் போது, பள்ளியில் பன்னோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கு பள்ளியின் வருடாந்திர விருதுகளை வழங்கி உரையாற்றவுள்ளார்.

 

1897-ம் ஆண்டில் நிறுவப்பட்ட சிந்தியா பள்ளி, வரலாற்றுச் சிறப்புமிக்க குவாலியர் கோட்டையின் மீது அமைந்துள்ளது.

*******

Release ID: 1969521

AD/PLM/RS/KRS


(Release ID: 1969577) Visitor Counter : 113