பிரதமர் அலுவலகம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028-ல் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருப்பதைப் பிரதமர் வரவேற்றுள்ளார்
प्रविष्टि तिथि:
16 OCT 2023 8:03PM by PIB Chennai
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028-ல் பேஸ்பால்-சாஃப்ட்பால், கிரிக்கெட், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். கிரிக்கெட்டைச் சேர்த்திருப்பது, இந்த அற்புதமான விளையாட்டிற்கு உலகளாவிய புகழ் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028-ல் பேஸ்பால்-சாஃப்ட்பால், கிரிக்கெட், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகியவை இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற முறையில், இந்த அற்புதமான விளையாட்டின் உலகளாவிய புகழ் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கும் வகையில், கிரிக்கெட்டைச் சேர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.”
***
ANU/SMB/BR/AG
(रिलीज़ आईडी: 1968339)
आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam