பிரதமர் அலுவலகம்
கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஆகச் சிறந்த செயல்திறனுக்குப் பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
08 OCT 2023 11:03AM by PIB Chennai
கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம் மற்றும் கடின உழைப்பை திரு மோடி பாராட்டினார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!
நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம், கடின உழைப்பு ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களது வெற்றிகள், நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணங்களையும், நம் அனைவருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.”
***
ANU/PKV/RB/DL
(रिलीज़ आईडी: 1965716)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam