பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 ரிலே ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2023 7:40PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 4×400 தொடர் ஓட்ட (ரிலே) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது ஆண்கள் 4×400 ரிலே அணி மிகவும் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் சிறப்பான திறனை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு மீண்டும் தங்கப் பதக்கம் வாங்கித் தந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகள்".
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965348)
வருகையாளர் எண்ணிக்கை : 128
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada