பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காம்பவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆடவர் வில்வித்தை அணிக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2023 9:08PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவீன் தியோட்டலே மற்றும் பிரதமேஷ் ஜவ்கர் ஆகியோர் அடங்கிய ஆடவர் வில்வித்தை அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“இந்திய வில்வித்தை வீரர்களின் பூரண வெற்றி! காம்பவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது ஆடவர் வில்வித்தை அணியால் பெருமை கொள்கிறோம்!

அபிஷேக் வர்மா @archer_abhishek, ஓஜாஸ் பிரவீன் தியோட்டலே, பிரதமேஷ் ஜவ்கர், ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் அபாரம்! அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”

***

ANU/PKV/BR/AG


(வெளியீட்டு அடையாள எண்: 1964923) வருகையாளர் எண்ணிக்கை : 196