பிரதமர் அலுவலகம்

மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 04 OCT 2023 7:18PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு பிரதமர் திரு  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ  கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு @LovlinaBorgohai வாழ்த்துகள்.

தனது அசாதாரண திறமை மற்றும் நுட்பத்தை வெளிப்படுத்தியதன்  மூலம், நம் தேசம் கொண்டாடுவதற்கு  ஒரு சிறந்த காரணத்தை அவர் வழங்கியுள்ளார். அவர் தொடர்ந்து முன்னேறி, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்."

-----------

SMB/ANU/ BR/KV



(Release ID: 1964578) Visitor Counter : 95