பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டை +92 கிலோ கிராம் எடைப்பிரிவில் நரேந்தர் பெர்வால் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 03 OCT 2023 10:04PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும்  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆண்கள் குத்துச்சண்டை +92 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

"குத்துச்சண்டை +92 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்!

***

ANU/SRI/SMB/AG/KPG

 

 



(Release ID: 1963999) Visitor Counter : 87