பிரதமர் அலுவலகம்

வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 OCT 2023 8:27PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது அற்புதமான திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்று வெற்றிக்கு வழிவகுத்த சிறந்த @nikhat_zareen-க்கு வாழ்த்துகள். இந்தப் பதக்கம் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நல்லொழுக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

***

ANU/AD/KB/AG/KPG

 

 



(Release ID: 1963800) Visitor Counter : 89