பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் 800 மீ ஓட்டத்தில் நந்தினி அகசாரா வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2023 8:36PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் 800 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நந்தினி அகசராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“பெண்களுக்கான ஹெப்டத்லான் 800 மீட்டர் போட்டியில் நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் வென்றதை இந்தியா கொண்டாடுகிறது. அவர் ஒரு முழுமையான சாம்பியன், விளையாட்டு உணர்வை, சிறப்பை வெளிப்படுத்துகிறார். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.
***
ANU/AD/KB/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1963577)
வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada