பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 1, 2023 அன்று ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு

प्रविष्टि तिथि: 29 SEP 2023 10:12AM by PIB Chennai

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மை முயற்சியான ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நகர்பகுதி தூய்மை என்ற தலைப்பில் எக்ஸ் சமூக ஊடக தளத்தில்  ஒரு இடுகையைப் பகிர்ந்து பிரதமர் திரு.மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக நாங்கள் ஒன்று கூடுகிறோம்.

தூய்மை இந்தியா என்பது பகிர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பாகும், மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்.என்று பிரதமர் திரு.மோடி தனது இடுகையில் கூறியுள்ளார்.

***


ANU/AD/BS/KPG


(रिलीज़ आईडी: 1961940) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada