பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சவுக்சே ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2023 9:59PM by PIB Chennai
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் குழு, வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடுதல் பிரிவு வீராங்கனைகள் ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சவுக்சே ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சாதனையைப் பாராட்டிய பிரதமர், "இந்த வெள்ளிப் பதக்கம் உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பலனாகும். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் #AsianGames2022 தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருந்து, உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வோம்" என்று கூறினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1960298)
வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam