வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒருங்கிணைந்து தூய்மைப் பணி

Posted On: 24 SEP 2023 1:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அனைத்து தரப்பு குடிமக்களும் தூய்மை இந்தியாவுக்கான உரிமையை எடுத்துக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் செயலில் ஈடுபட்டனர்இதன் விளைவாக, தூய்மை ஒரு தேசிய நடத்தையாக மாறியது மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஒவ்வொரு வீட்டின் பெயராக மாறியது.

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சக குடிமக்களுக்கு பிரதமர் ஒரு தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். மனதின் குரல் 105வது அத்தியாயத்தில் பேசிய அவர், அக்டோபர்1 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து குடிமக்களும் இணைந்து மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு 'தூய்மையாக அஞ்சலி' செலுத்த வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

 

தூய்மையே சேவை என்ற தலைப்பில் பேசிய அவர், "அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை குறித்த ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை தொடர்பான இந்த பிரச்சாரத்தில் நீங்களும் நேரம் ஒதுக்கி உதவ வேண்டும். உங்கள் தெரு அல்லது அக்கம்பக்கத்தில் உள்ள ஒரு பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் இந்த தூய்மை பிரச்சாரத்திலும் நீங்கள் சேரலாம்."

 

சந்தை இடங்கள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பு குடிமக்களும் இணைய வேண்டும் என்று இந்த மெகா தூய்மை இயக்கம் அழைப்பு விடுக்கிறது.

 

ஒவ்வொரு நகரம், கிராம பஞ்சாயத்து, விமானப் போக்குவரத்து, ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும், பொது நிறுவனங்களும் குடிமக்கள் தலைமையிலான தூய்மை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும்.

 

தூய்மை இயக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம்தனியார் நிறுவனம் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகள்மாவட்ட நிர்வாகத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

தூய்மை பணிகள் குறித்த தகவல்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://swachhatahiseva.com/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கும்.

 

தூய்மைப்படுத்தும் இடத்தில், குடிமக்கள் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றலாம். குடிமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து, தூய்மை தூதர்களாக மாறுவதன் மூலம் மக்கள் இயக்கத்தை வழிநடத்தவும் அழைப்பு விடுக்கும் ஒரு பிரிவையும் இந்த இணையதளம் வழங்குகிறது.

 

செப்., 15 முதல் அக்., 2 வரை கடைபிடிக்கப்படும், 'துாய்மையே சேவை' 2023 திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய கட்டடங்களை சீரமைத்தல், நீர்நிலைகள், படித்துறைகளை சுத்தம் செய்தல், சுவர்களை சுத்தம் செய்தல், தெருக்கூத்து, ரங்கோலி போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு துாய்மை பணிகளில், பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, பதினைந்து நாட்களில்  இதுவரை 5 கோடிக்கும் அதிகமான குடிமக்கள்  இணைந்துள்ளனர்.

***  

SM/ANU/BS/KRS



(Release ID: 1960109) Visitor Counter : 246