கலாசாரத்துறை அமைச்சகம்

"எனது மண் எனது தேசம்" இயக்கத்தின் முதல் கட்டத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பங்கேற்றனர்

Posted On: 15 SEP 2023 11:32AM by PIB Chennai

நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2023 ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய இயக்கமான "எனது மண் எனது தேசம்" தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 12 மார்ச் 2021 அன்று தொடங்கிய விடுதலையின் அமிர்த பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாகும். இந்த இயக்கத்தில் இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று அதில் பெருமளவில் மக்கள் பங்கேற்பு (ஜன் பாகிதாரி) இருந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும்  நாட்டுக்காக தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்காக நினைவு பலகைகளை நிறுவுவது போன்ற திட்டங்களும், நமது வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில், பாஞ்ச் பிரான்  எனப்படும் 5 உறுதிமொழி எடுத்தல், போன்ற முன்முயற்சிகளும் இந்த இயக்கத்தில் அடங்கும்.

இதுவரை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2.33 லட்சத்துக்கும் மேற்பட்ட நினைவு பெயர்பலகைகள் மற்றும் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 4 கோடி பாஞ்ச் பிரான் எனப்படும்  5 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டு அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2 லட்சம் வீரதீர செயல்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசுதா வந்தன் என்ற கருப்பொருளின் கீழ், 2.36 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, 2.63 லட்சம் அமிர்த பூங்காக்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள அமிர்தக் கலச யாத்திரைகளுடன் இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டம் நடைபெற  உள்ளது. நாடு தழுவிய இயக்கமாக நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை இதன் நோக்கம்.

  

-----------

SM/PLM/RS/GK

 



(Release ID: 1957695) Visitor Counter : 108