பிரதமர் அலுவலகம்

பிரெஞ்சு குடியரசு அதிபருடனான பிரதமரின் சந்திப்பு

Posted On: 10 SEP 2023 11:30PM by PIB Chennai

 பிரதமர் திரு நரேந்திர மோடி,  செப்டம்பர் 10, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது பிரெஞ்சு குடியரசு  அதிபர் மேதகு  திரு  இமானுவேல் மேக்ரனுடன் மதிய உணவின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா-பிரான்ஸ்  உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25 வது ஆண்டின்  நிறைவை நினைவுகூரும் வகையில், 2023 ஜூலை 14 அன்று  நடைபெற்ற பிரெஞ்சு தேசிய தினக்  கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக பிரதமர்   பாரிஸ் சென்ற பிறகு   அந்நாட்டு அதிபர் திரு மேக்ரனின் இந்திய பயணமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவின் ஜி20 மாநாட்டின் வெற்றிக்காக திரு மேக்ரன், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விஷயத்தில் பிரான்ஸ் ஆதரவு அளித்ததற்காக அவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர், குறிப்பாக 'ஹாரிசன் 2047'  திட்டம், இந்தோ-பசிஃபிக்  திட்டம் மற்றும் பிரதமரின் சமீபத்திய பயணத்தின் போது வெளிப்பட்ட பிற  முக்கிய முடிவுகள் குறித்து விவாதித்தனர். பாதுகாப்பு, தொழில்துறை, புத்தொழில், விண்வெளி, அணுசக்தி,  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, முக்கியமான தொழில்நுட்பம், இணைப்பு, ஆற்றல், காலநிலை மாற்றம், கல்வி முதலிய துறைகளிலும், எஸ்.எம்.ஆர் மற்றும் ஏ.எம்.ஆர் தொழில்நுட்பங்களை இணைந்து  உருவாக்குவதற்கான கூட்டாண்மை,  தேசிய அருங்காட்சியகத்தில் ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்புக்கான இலக்குகளை செயல்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உட்பட முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினர். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார நடைபாதை (ஐ.எம்.இ.சி) அறிவிப்பை அவர்கள் வரவேற்றதுடன், அதை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் உறுதியளித்தனர்.

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு அதிபர் திரு மேக்ரன் வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் ஆறு தசாப்த கால இந்திய-பிரான்ஸ் விண்வெளி ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தனர்.

***

ANU/AP/BR/AG



(Release ID: 1956532) Visitor Counter : 125