பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடந்த 9 ஆண்டுகளில் சூரிய சக்தித் திறன் 54 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் நிகர பூஜ்ய உமிழ்வின் முன்னேற்றம் குறித்து பிரதமர் பாராட்டு

Posted On: 29 AUG 2023 8:41PM by PIB Chennai

மிஷன் நெட் ஜீரோ (நிகர பூஜ்ய உமிழ்வு இயக்கம்) முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

 

கடந்த 9 ஆண்டுகளில் சூரிய சக்தித் திறன் 54 மடங்கு அதிகரித்துள்ளதாக ரயில்வேத்துறை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3.68 மெகாவாட் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், 2014-23-ம் ஆண்டு காலகட்டத்தில் 200.31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே-யின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"பசுமையான எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாட்டில் பாராட்டத்தக்க சிறந்த முன்னேற்றத்தை இது காட்டுகிறது. வெறும் 9 ஆண்டுகளில், பூஜ்ஜிய உமிழ்வை (#MissionNetZero) நோக்கி கணிசமான முன்னேற்றங்களை அடைந்து, நமது திறனைக் கணிசமாக அதிகரித்துள்ளோம். இந்தப் பயணத்தைத் தொடர்வோம். இந்தியாவுக்கு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.

 

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Release ID: 1953364

AP/PLM/KRS


(Release ID: 1953404) Visitor Counter : 149