பிரதமர் அலுவலகம்
ஸ்மிருதி வனத் திறப்பு விழா தினத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
கட்ச்-சில் உள்ள ஸ்மிருதி வனத்தைப் பார்வையிடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
Posted On:
29 AUG 2023 8:32PM by PIB Chennai
2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்மிருதி வனம் என்ற நினைவிடம் திறக்கப்பட்ட தினத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்மிருதி வனத்தைத் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கட்ச்-சில் உள்ள ஸ்மிருதி வனத்தை அனைவரும் பார்வையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோடி ஸ்டோரி என்ற எக்ஸ் கணக்குப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
"2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நாம் இழந்தவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்மிருதி வனத்தைத் தொடங்கி ஒரு ஆண்டு ஆகிறது. இது மீட்சித் திறனையும் நினைவுகளையும் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னமாகும். கடந்த ஆண்டு திறப்பு விழா நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளேன். கட்ச்-சில் உள்ள ஸ்மிருதி வனத்தைப் பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Release ID: 1953358
AP/PLM/KRS
(Release ID: 1953398)
Visitor Counter : 135
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam